சுற்றுலாத்துறையினர் தடையின்றி எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட கியூ.ஆர் குறியீடு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை (16) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதாகவும், இன்று மாலைக்குள் இந்த புதிய முறைமையை அறிமுகப்படுத்த அதிகாரிகள் எதிர்ப்பார்த்துள்ளதுள்ளனர்.

கடந்த காலங்களிலும் இவ்வாறானதொரு முறைமை நடைமுறையில் இருந்தது. சுற்றுலாத்துறையில் உள்ளவர்கள் எவ்வித இடையூறுமின்றி தமது பணிகளை முன்னெடுப்பதை உறுதி செய்யும் நோக்கில், இன்று மாலைக்குள் இந்த புதிய கியூ.ஆர் முறைமையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்,". இது தொடர்பான அனைத்து திட்டமிடல்களும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளினால் அங்கிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 25-30 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய கிழக்கு நாடுகள் ஒரு முக்கிய போக்குவரத்து புள்ளியாக அமைகின்றன. இவ்வாறான விமானப் போக்குவரத்துகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், நேரடி விமான சேவைகள் மூலம் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்தும் நாட்டிற்கு வருகை தருகிறார்கள்.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிட்டத்தக்களவு குறைவடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.