யாழ்.வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரிக் காணி உரிமையாளர்களால் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி மீட்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை (06.11.2026) 29 ஆவது வாரமாக மயிலிட்டி கொமாண்டோப் பங்களா இராணுவ முகாமுக்கு முன்பாக முன்னெடுக்கப்படுகிறது.
குறித்த போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.