பொலன்னறுவை - மனம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹவெவ பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் காயமடைந்த நபரொருவர் மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் மஹவெவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஆவார்.

உயிரிழந்த நபரும் மேலும் சிலரும் இணைந்து மரம் ஒன்றை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போதே எதிர்பாராதவிதமாக இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரம் வெட்டப்பட்ட போது இளைஞனின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மனம்பிட்டிய பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.