“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் பெண்கள் இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின் சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி, மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space