நுவரெலியா - மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்ஸ்விக்  பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  (03) உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றிச் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த 28 முதல் 39 வயதிற்குட்பட்டவர்கள் ஆவார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.