மாகாண குறியீடு அற்ற புதிய வாகன இலக்கத் தகடுகள்: மே மாத இறுதியில் இருந்து விநியோகம்!
Ad Space
Ad Space
புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழுவிற்கு (COPF) திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்த போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
யுத்த காலத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக இலக்கத் தகடுகளில் மாகாணங்களை அடையாளப்படுத்தும் குறியீடுகள் மற்றும் 'Frequency ID' பயன்படுத்தப்பட்டன. தற்போது பொலிஸாரிடம் அதனை சரிபார்ப்பதற்கான கருவிகள் இல்லாமை மற்றும் பாதுகாப்பு தேவை குறைந்துள்ளதால், மாகாணக் குறியீடுகளை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகன உரிமையாளர்கள் தங்களது விருப்பமான பெயர்களை இலக்கத் தகடுகளில் பொறித்துக்கொள்வதற்கான விசேட முறைமை விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
Ad Space
Ad Space