மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!
Ad Space
Ad Space
அநுராதபுரம் - அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று (22) மாலை உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும், 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருக்கும்போதே அவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளார்.
குறித்த நபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகளின் பின்னர் இன்று வியாழக்கிழமை (23) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space