முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல சட்டத்தரணியுமான மாமனிதர்.நடராஜா ரவிராஜ்ஜின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (10.11.2026) பிற்பகல்-02 மணி முதல் யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.  

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாமனிதர்.ரவிராஜ்ஜின் உருவப்படத்துக்கு முன்பாக ஈகைச் சுடரேற்றப்பட்டு,  உருவப் படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுரைகளும் இடம்பெற்றன.