களுத்துறை - அகலவத்தை பகுதியில்  இடம்பெற்ற மின்னல் தாக்கத்தில் 15 வயதுடைய சிறுவனொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரன் கையில் காயமடைந்துள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை   இந்த மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளதுடன், மின்னல் தாக்கியதில் குறித்த சிறுவன் தூக்கி வீசப்பட்டு கட்டிலின் கீழ் விழுந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து சிறுவனின் தாயார் அவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், இந்த சம்பவத்தின் போது மின்னல் தாக்குதலுக்கு இலக்கான அவரது சகோதரனின் கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.