இஸ்ரேலில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி கூட்டமைப்பு மற்றும் காடி ஐசன்காட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி ஆகிய இரண்டுக்கும்  ஆட்சி அமைக்கத் தேவையான 61 பெரும்பான்மை இடங்கள் கிடைக்காததால் அங்கே தொங்கு பாராளுமன்றச் சூழல் உருவாகியுள்ளது.

120 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் நெதன்யாகுவின் கூட்டணி 53 இடங்களை மாத்திரமே  பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவரான காடி ஐசன்காட் தலைமையிலான கூட்டணி 48 இடங்களை வெல்லும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாக இஸ்ரேலிய அரபுப் பகுதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் 19 இடங்களைக் கைப்பற்றித் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்ஸாக் மீண்டும் ஒரு இடைத்தேர்தலைத் தவிர்த்து, கட்சிகள் விட்டுக்கொடுப்புகளுடன் ஆட்சி அமைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரபுப் கூட்டமைப்பின் தலைவர் யூசுப் ஜபாரீன், நெதன்யாகுவின் ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கத் தயார் எனக் கூறிய போதிலும், காஸா போர் மற்றும் ஆக்கிரமிப்புகள் காரணமாகக் கூட்டணியில் நேரடியாக இணைய மறுத்துள்ளார்.

தேர்தலுக்கு மத்தியில் ஈரானுக்கு எதிரான இராணுவச் நடவடிக்கைகளுக்கான பேச்சுக்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், நெதன்யாகு தனது சுய அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பைப் பயன்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் காடி ஐசன்காட் எச்சரித்துள்ளார்.