கம்பஹாவில் பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெமுனுமாவத்தை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (9) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தன்று முச்சக்கரவண்டி சாரதி, தனது வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ள நிலையில், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீப்பற்றி எரிவதை கண்டு வெளியே சென்று பார்த்த போது முகமூடி அணிந்திருந்த இருவர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முச்சக்கரவண்டி சாரதி கொலை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space