முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை
Ad Space
Ad Space
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் இளவரசர் சைத் அல் ஹுசைனின் இலங்கை விஜயத்தின் போது, கொழும்பு தும்முல்லையிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக பாதைகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராகக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு விசாரணைகளுக்காக அவர் இன்று திங்கட்கிழமை (21) நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை அடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் நீதிமன்றினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Ad Space
Ad Space