முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு அசோக ரன்வலவின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி - பியகம வீதியில் உள்ள அசோக ரன்வலவின் மனைவி வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, களனியில் இருந்து வந்த மற்றொரு கார் அந்த கார் மீது மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி களுத்துறை வடக்கைச் சேர்ந்தவர் என்பதும், விபத்து நடந்த நேரத்தில் அவர் மது அருந்தியிருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி விபத்தில் காயம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space