வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் புதிய தலைவராக எஸ்.விமலேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான நியமனக் கடிதத்தைப் புதன்கிழமை (14.01.2026) வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்துக் கையளித்தார். இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் உடனிருந்தார்.