முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி அதிரடி கைது!
Ad Space
Ad Space
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று(16.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில், அவரது வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, இரண்டு ரி-56 ரக மெகசின்கள், 221-க்கும் மேற்பட்ட ரவைகள் மற்றும் இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Ad Space
Ad Space