மூதூரில் ஏழு இலட்சம் பணம் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் கணவன் மனைவி கைது
Ad Space
Ad Space
மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட #ஆலிம்_நகர் பகுதியில், கொமர்ஷல் க்ரெடிட் வங்கிக்கு பக்கவாட்டில் செல்லும் வீதியில் வசித்து வந்த 35 வயதுடைய கணவரும், 33 வயதுடைய மனைவியுமான இரு வியாபாரிகள் புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ஏழு இலட்சம் ரூபாய் பணம், ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு கைப்பேசி என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இக்கைது, குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வந்த வேளையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சந்தேகநபர்களிடமிருந்து 3 கிராம் 200 மில்லிகிராம் அளவிலான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space