மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில், கடந்த தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நான்கு வீடுகள் கொண்ட வீட்டு திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  செவ்வாய்க்கிழமை (16), மூதூர் தோப்பூர் பகுதியில் நடைபெற்றது.

இவ்வீட்டு திட்டம் டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் அனுசரணையுடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் ஒருங்கிணைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர கலந்து கொண்டார்.

மேலும், கிழக்கு மாகாண தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் என். சுகுமாரன், டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் பொறியியலாளர் எஸ். கஜேந்திரன், கட்டடங்கள் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எஸ். துவாரகன், கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் பி. ராஜசேகர், பொதுமக்கள் தொடர்பு அதிகாரி நதுன் திலீப், வீடமைப்பு திட்ட ஒப்பந்தக்காரரும் எஸ்.ஜி.எம்.கே. நிறுவனத்தின் உரிமையாளரும், மூதூர் இந்து இளைஞர் மன்றத் தலைவர் சி. சந்துரு, தேசிய மக்கள் சக்தியின் பிரதேச அமைப்பாளர் கே. சப்ரான், மூதூர் பிரதேச சபை உறுப்பினர் பாத்திமா அப்ரின் மற்றும் க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூதூர் பிரதேச இணைப்பாளர் வி.எம். ரம்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.