புதிய மூன்று தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் அமைச்சின் செயலாளர் ஒருவரின் நியமனத்திற்கும் இக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
உயர்பதவிகள் பற்றிய குழு கடந்த கடந்த வாரம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய, மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக தர்ஷன மகேந்திர பெரேராவின் நியமனத்திற்கும், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக தசநாயக்க முதியன்சலாகே சுமித் பிரியந்த தசநாயக்கவை நியமிப்பதற்கும் இங்கு அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், அவுஸ்திரியா குடியரசிற்கான இலங்கைத் தூதுவரும், நிரந்தர வதிவிடப் பிரதிநிதியுமாக தயானி மென்டிஸை நியமிப்பதற்கும், ரொமேனியாவுக்கான இலங்கைத் தூதுவராக சமந்த பிரியதர்ஷன வீரசிங்க பத்திரனவின் நியமனத்திற்கும் இக்குழுவில் அனுமதி வழங்கப்பட்டது.
அதேநேரம், சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கே.ஆர்.உடவலவவின் நியமனத்திற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது.
மூன்று புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் ஒருவரின் நியமனங்களுக்குப் நாடாளுமன்ற உயர்பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space