மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நிலவும் போர் பதற்றங்கள் தொடர்பாக, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், பிராந்திய பதற்றங்களின் பின்விளைவுகள் மற்றும் அவற்றின் விரிவான தாக்கங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்தியாவின் “அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை” கொள்கை மற்றும் “மகாசாகர் தொலைநோக்கு” முயற்சிக்கு தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்துள்ளார்.