இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வைய் ஹுவாசியாங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும், இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் உலகளாவிய போக்குகள் குறித்தும் இச்சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், தமது ஜனாதிபதி பதவிக் காலத்தில் சீனாவுடனான இராஜதந்திர உறவுகள் மற்றும் அனுபவங்களை நினைவுகூர்ந்த முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நட்புறவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வலுவடையுமென நம்பிக்கை வெளியிட்டார்.