வரி செலுத்தப்படாமல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட சொகுசு மோட்டார் வாகனமொன்றைத் தனது பொறுப்பில் வைத்திருந்தமை மற்றும் வரி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள பிரபல தனியார் ஹோட்டலொன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட குறித்த சொகுசு மோட்டார் வாகனம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, அவர் தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.