குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்ட மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, குருணாகல் - பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தினால் திங்கட்கிழமை  (20) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வாகனப் பதிவுகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விசாரணையின் கீழ், கடந்த மார்ச் 27 ஆம் திகதி அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால்  கைது செய்யப்பட்டார்.

ஒரு கெப்  ரக வாகனத்தின் சேஸிஸ் இலக்கத்தை  மாற்றி, அதனை மோசடியான முறையில் பதிவு செய்வதற்கு உறுதுணையாக இருந்தமை மற்றும் தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமரசிங்க, திங்கட்கிழமை  (20) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவருக்கு இந்தப் பிணை வழங்கப்பட்டது.