யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் அனுசரணையில் சிகரம் மற்றும் சேப் நிறுவனங்கள் இணைந்து நடாத்திய 'இந்தியாவில் கல்வி' கல்வி வழிகாட்டல் கண்காட்சி திங்கட்கிழமை (19.01.2026) காலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டார். இக் கண்காட்சி நிகழ்வில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், இந்தியாவின் எட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.