வரணி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர், மற்றும் வரணி கொத்தணிப் பாடசாலைகளின் முன்னாள் அதிபராக நீண்ட காலங்கள் கடமையாற்றியவரும், சாவகச்சேரிப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சிற்றம்பலம் துரைராசா திங்கட்கிழமை (19.01.2026) காலை யாழ் தென்மராட்சி வரணியில் தனது 88 ஆவது வயதில் காலமானார்.

பல கல்வியியலாளர்களையும், ஆசிரியர்களையும், உத்தியோகத்தர்களையும் உருவாக்கிய அன்னாரின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை (21.01.2026) காலை-09 மணியளவில் வரணி இடைக்குறிச்சியிலுள்ள அவரது இல்லத்தில் இடம்பெறும்.