யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல...!
Ad Space
Ad Space
யாழ்ப்பாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்ல வலுப்படுத்தும் நோக்கில், Save a Life அமைப்பு, Ceylon Cold Stores மற்றும் Viridis Recyclers ஆகிய நிறுவனங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட “Jaffna Recycling Hub” இன்று திங்கட்கிழமை (21) திறந்து வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, யாழ்ப்பாணம் செம்மணி, அரியாலையில் அமைந்துள்ள மறுசுழற்சி மையத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அரசாங்க அதிபர்,யாழ்ப்பாண மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை முற்றாகத் தடுப்பது சவாலானதாக உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதால், அவற்றின் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. எனவே, பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகச் சேகரித்து, தரம் பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவது நடைமுறைக்கு ஏற்றதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நடவடிக்கையாகும். தாம் சிறுவர்களாக இருந்த காலத்தில் குளிர்பானங்கள் கண்ணாடிப் போத்தல்களில் வழங்கப்பட்டதுடன், அப்போத்தல்களை சேகரித்து மீண்டும் ஒப்படைத்து, அதற்குப் பதிலாக குளிர்பானங்களைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை காணப்பட்டுள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளன. இந்த மறுசுழற்சி மையத்தின் ஊடாக பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரிக்கும் பணியில் நேரடியாக சுமார் 10 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாகவும், சேகரிக்கப்பட்ட கழிவுகள் அடுத்தடுத்த கட்டங்களில் பதப்படுத்தப்பட்டு புதிய பொருட்களாக மாற்றப்படுவதன் மூலம் மேலும் பலருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு உள்ளன. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றாகத் தடுக்க முடியாத நிலையிலும், அவற்றை முறையாக முகாமைத்துவம் செய்து மறுசுழற்சிக்கு கொண்டு செல்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை கணிசமாகக் குறைக்க முடியும். மாவட்டத்திலும் நாட்டிலும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு இத்தகைய முயற்சிகள் சிறந்த வாய்ப்பாக அமையும்.மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் Save a Life நிறுவனத்திற்கு தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். குறிப்பாக, “Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் செயற்பாடுகளுக்கு அந்நிறுவனம் வழங்கி வரும் ஆதரவு பாராட்டுக்குரியது. யாழ்ப்பாண மறுசுழற்சி மையத்தின் செயற்பாடுகள் வெற்றியடைவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்து, தூய்மையானதும் பசுமையானதுமான யாழ்ப்பாணத்தை உருவாக்குவதற்கு இந்த முயற்சி குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக முகாமைத்துவம் செய்து, அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் வகையில் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன் ஊடாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்தல், தரம் பிரித்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு கட்டுகளாக (Bales) அழுத்தப்பட்ட பின்னர் மறுசுழற்சிக்கு Colombo Viridis Recyclers நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முயற்சியானது தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குவதுடன், பிளாஸ்டிக் கழிவுகளை பொறுப்புடன் கையாள்வதற்கான சமூகப் பங்களிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை இந்த மையத்தில் ஒப்படைக்க முடியும். ஒப்படைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளின் வகை மற்றும் எடைக்கு ஏற்ப ஒரு கிலோகிராமுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும். மேலும் கண்டறிகஉள்ளூர் சுற்றுலா ஆராய்கஉள்ளூர் செய்திகள் அறிஉள்ளூர் செய்திகள்பிளாஸ்டிக் கழிவுகளை ஒப்படைக்க விரும்புவோர் யாழ்ப்பாணம் செம்மணி – அரியாலை, இலக்கம் 37, இளையதம்பி ஒழுங்கையில் அமைந்துள்ள மையத்தில் ஒப்படைக்க முடியும் என்பதுடன், 077 228 4939 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும் முடியும் என்றார். இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, Save a Life அமைப்பின் பணிப்பாளர் ராகுலன் கந்தசாமி, மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், Ceylon Cold Stores நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவுத் தலைவர் தில்ஷானி எதிரிசிங்க, நுகர்வோர் மற்றும் வெளிப்புற ஈடுபாட்டு முகாமையாளர் பிரேமலால் பெரேரா, திட்டத் தலைவர் – வெளிப்புற சுற்றுச்சூழல் விவகாரங்கள் துமிந்து பெரேரா, Viridis Recyclers நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புத்திக முத்துகுமாரண உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Ad Space
Ad Space