யாழ்ப்பாண நகருக்கு அருகில் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 900,000 ரூபாய் பணத்துடன் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேரை யாழ்ப்பாணப் போலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண நகருக்கு அருகில் போலிஸ் ரோந்துப் பிரிவினர் இந்த குழுவை நிறுத்தி சோதனை செய்த போதே இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அந்த நேரத்தில் ஒரு கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
காரின் உள்ளே பல கூர்மையான ஆயுதங்கள் மற்றும் 900,000 ரூபாய் பணம் கண்டெடுக்கப்பட்டதாகவும் போலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, போலிஸார் ஒன்பது சந்தேக நபர்களையும் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்துள்ளனர்
சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து யாழ்ப்பாணப் போலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.