யாழ்ப்பாணத்தின் முன்னணிப் பாடசாலைகளான யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவர்கள், 2025 (2026) ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி

அதற்கமைய யாழ்.இந்து கல்லூரியில் பரீட்சைக்குத் தோற்றிய 349 மாணவர்களில் 347 பேர் சித்தியடைந்துள்ளனர். இதன் மூலம் இப்பாடசாலை 99.42 சதவீத சித்தி வீதத்தைப் பதிவு செய்துள்ளது. இதில் 81 மாணவர்கள் 9 'ஏ' சித்திகளையும், 52 மாணவர்கள் 8 'ஏ' சித்திகளையும், 32 மாணவர்கள் 7 'ஏ' சித்திகளையும், 32 மாணவர்கள் 6 'ஏ' சித்திகளையும், 33 மாணவர்கள் 5 'ஏ' சித்திகளையும் பெற்றுள்ளனர்.



யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி

யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரியைப் பொறுத்தவரை, பரீட்சைக்குத் தோற்றிய 257 மாணவர்களில் 247 பேர் சித்தியடைந்துள்ளனர். இதன் மூலம் இப்பாடசாலை 96.12 சதவீத சித்தி வீதத்தை எட்டியுள்ளது. இதில் 14 மாணவிகள் 9 'ஏ' சித்திகளையும், 15 மாணவிகள் 8 'ஏ' சித்திகளையும், 22 மாணவர்கள் 7 'ஏ' சித்திகளையும், 20 மாணவர்கள் 6 'ஏ' சித்திகளையும், 32 மாணவர்கள் 5 'ஏ' சித்திகளையும் பெற்றுள்ளனர்.

கொழும்பு - சைவ மங்கையர் வித்தியாலயம்

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தில் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 95.15 சதவீதமானோர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக 17 மாணவர்கள் 9 'ஏ' சித்திகளையும், 13 மாணவர்கள் 8 'ஏ' சித்திகளையும், 11 மாணவர்கள் 7 'ஏ' சித்திகளையும், 16 மாணவர்கள் 6 'ஏ' சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முள்ளியவளை - வித்தியானந்தா கல்லூரி

இதேபோன்று முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியில்  7 மாணவர்கள் 9 'ஏ' சித்திகளையும், 5 மாணவர்கள் 8 'ஏ' சித்திகளையும், 4 மாணவர்கள் 7 'ஏ' சித்திகளையும், 6 மாணவர்கள் 6 'ஏ' சித்திகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.