யாழ் துன்னாலை கலிகைச் சந்தியில் வைத்து 15.02.2007 அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் ஈபிடிபியினருடன் இணைந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி இன்று சனிக்கிழமை (21.02.2026) வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் யாழ் பருத்தித்துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனுக்காகவும், கொல்லப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்காகவும் இந்தப் போராட்டத்தின் போது குரல் எழுப்பப்பட்டது.
இதன்போது சிரேஷ்ட ஊடகவியலாளர் மதிவாணனின் கைகளும், கால்களும் இரும்புச் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு, இரத்தக் கறைபடிந்த ஆடை நீதி கோரிய காட்சி காண்பவர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது.
யாழ்.பருத்தித்துறையில் காண்பவர்கள் அனைவரையும் கலங்கடித்த காட்சி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space