பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் வேண்டாம், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கெனக் கொண்டுவரவுள்ள புதிய சட்டமும் வேண்டாமென வலியுறுத்தி வடக்கு- கிழக்கில் முன்னெடுக்கப்படும் மாபெரும் கையெழுத்துப் போராட்டத்தின் ஒரு கட்டமாகப் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை-09 மணி முதல் யாழ் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு முன்பாக மாபெரும் கையெழுத்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

இப் போராட்டத்தில் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தைத் தரிசிக்க வந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர்.