யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை 'கனலி' இதழ்- 06 வெளியீடும், குறுந் திரைப்பட விழாவும் வெள்ளிக்கிழமை (06.03.2026) பிற்பகல்-01 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெறும்.

நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், கலைப் பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி.கி.சண்முகநாதன், ஊடகத் துறைப் பேராசிரியர் எஸ்.ரகுராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டு சிறப்பிப்பர். கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து சஞ்சிகைக்கான கருத்துரையைக் கல்வியியல்துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா  ஆற்றவுள்ளார். சஞ்சிகை வெளியீட்டினைத் தொடர்ந்து மாணவர்களால் இயக்கப்பட்ட குறும் படங்களின் திரையிடலும் இடம்பெறும்.