நாளை வியாழக்கிழமை (23.04.2026) தமிழக சட்டமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன். சீமானுக்கு ஆதரவாகத் தற்போது யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக யாழ்.நகர், திருநெல்வேலிச் சந்தி, நல்லூர், நாவாந்துறை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில், யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு முன், பாசையூர் ஆகிய பகுதிகளில் சீமானுக்கு ஆதரவாகப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சீமானின் புகைப்படத்துடன் குறித்த பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.