ஏப்ரல் மாதத்துக்கான லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
நிதியமைச்சின் அதிகாரிகளுடன் இன்று மாலை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குத் தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும், 30,000 மெற்றிக்தொன் எரிவாயு மாலைத்தீவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே லிட்ரோ எரிவாயு கையிருப்பு தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு கப்பல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.