வங்கதேசத்தில் கால்வாயில் மிதந்த டிரம்மில் இருந்து இந்து மதத்தைச் சேர்ந்தரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நமது அண்டை நாடான வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வங்கதேசத்தின் மைமன்சிங் மாவட்டம் பெகுன்பாரி பகுதியில் உள்ள கால்வாயில், நீல நிற டிரம் ஒன்று மிதந்து வந்தது.
இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அந்த டிரம்மை மீட்டு சோதனை செய்தனர்.
அப்போது, அதில் ஒரு ஆண் சடலம் இருப்பதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். அவரது கால்சட்டையில், மைமன்சிங் இந்து கூட்டுறவு கடன் சங்கத்தால் வழங்கப்பட்ட டோக்கன் ஒன்று இருந்தது.