வங்கதேச நாட்டில் இன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்களின் தீவிர போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இதனிடையே அங்கு பிப்.12ம் தேதி (இன்று) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், அரசின் நிர்வாக அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் ‘ஜூலை சாசனம்’ என்ற சீர்திருத்தத் தொகுப்பு தொடர்பான பொது வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளது.
இதனால் நாடு முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தலுக்காக நாடு முழுவதும் சுமார் 43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50% பதற்றமானவை என அடையாளம் காணப்பட் டுள்ளது. வாக்குப் பதிவு இன்று மாலை 4 மணிக்கு முடிவடையும். அதன் பின்னர் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
வங்கதேச நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத் தேர்தல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space