வடக்கு மாகாணத்தில் சுமார் 15 ஆயிரம் நாய்களுக்குச் சிகிச்சை அளிக்கக் கூடிய மருந்துகள் கைவசம் தயாராகவுள்ள நிலையில் இம் முறை பெண் நாய்களுடன் சேர்த்து ஆண் நாய்களுக்கும் சமாந்தரமாகக் கருத்தடைச் சிகிச்சையை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண நிதி, திட்டமிடல், சட்டம் ஒழுங்கு, காணி, மின்சக்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணம், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் மாதாந்த விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (16.06.2026) யாழ்.சுண்டுக்குளியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பெண் நாய்களுக்கான கருத்தடைச் சிகிச்சையை இந்த ஆண்டும் தொடர்வது தொடர்பில் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதற்கான நடைமுறைகளை வடக்கு மாகாணக் கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி எஸ்.வசீகரன் தெளிவுபடுத்தினார். வடக்கு
மாகாணச் சுகாதாரத் திணைக்களமும் தனியானதொரு கருத்தடைத் திட்டத்தை முன்னெடுப்பதால் இரு திணைக்களங்களும் ஒருங்கிணைந்து பிரதேசங்களைப் பகிர்ந்தளித்துக் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது.