வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகள்   திங்கட்கிழமை (22.06.2026) காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் அதிதிகள் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. இதன்போது மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் ஏற்றுக் கொண்டதுடன் பெருவிளையாட்டுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான விருதுகள், சான்றிதழ்களையும் வழங்கிக் கௌரவித்தார்.

ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.