வடக்கு மாகாணப் பொதுச் சேவையின் மாகாண அலுவலகப் பணியாளர் சேவையின் தரம்- III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை- 2025 (2026) சனிக்கிழமை (14.03.2026) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக் குழுவின் செயலாளர் ஆழ்வாப்பிள்ளை சிறி அறிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழு மேற்கொண்டுள்ளதுடன் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கு விண்ணப்பித்து இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள் வெள்ளிக்கிழமைக்குள் (13.03.2026) அலுவலக நேரத்தில் 0212219939 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரீட்சைப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
வடக்கு மாகாணப் பொதுச் சேவையின் மாகாண அலுவலகப் பணியாளர் சேவையின் தரம்- III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space