வத்தளை - ஹேகித்த சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேக விழா பக்திமயத்துடனும் மிகச் சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது.

இந்த மூன்றாவது கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 16 குண்ட பக்ஷங்களுடன் கூடிய யாகசாலை அமைக்கப்பட்டு, 17 துணைக் குண்டங்களோடு பூஜைகள் அனைத்தும் நடைபெற்றன.

தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த இரண்டு பத்தடியார்கள் உட்பட, சர்வ சாதா ஆச்சாரியர்களாகிய ஆன்மீகச் செல்வர்கள் மாதவ சர்மா, கோப்பாய் சிவம் மற்றும் சதானந்த சர்மா ஆகியோர் தலைமையிலும், ஆலயத்தின் பிரதம குரு . சிவாகர யோகேஸ்வர குருக்கள் சர்மா  முன்னிலையிலும் 40-க்கும் மேற்பபட்ட பொதுமக்கள் மற்றும் வத்தளை திருமுருகப் பெருமானின் திருவருள் துணையோடு, ஆலயத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேக விழா பக்திமயத்துடனும் மிகச் சிறப்பாகவும் நடைபெற்றுள்ளது.ட்ட மிகச் சிறந்த சிவாச்சாரியார்களைக் கொண்டு இந்த யாகசாலை பூஜைகள் மிகத் திறம்பட நடத்தப்பட்டன.

இந்தத் திருவிழாவிற்குத் திருவருள் கூட்டி வருகை தந்த பத்மஸ்ரீ திருத்தணி சுவாமிநாதன் ஓதுவார் மற்றும் அவரது உதவியாளர் ஓதுவார் சிவகுமார் ஆகியோர், தங்களின் பக்தி நெறியான தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடி பக்தர்களைப் பக்தி வெள்ளத்தில் திளைக்கச் செய்தனர்.

கடந்த  புதன்கிழமை (24) அன்று மதியம் 12 மணி வரை நடைபெற்ற குண்ட பூஜைகள் மற்றும் துணைக் கும்பாபிஷேக பூஜைகள் அனைத்தும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தன.

பொது விதியைத் தழுவி, கும்பங்களிலிருந்து பெறப்பட்ட அந்த நூலிலையினால் தெய்வ சக்தியைச் சந்நிதிக்குக் கொண்டு சேர்க்கும் நிகழ்வு மிக அற்புதமாகக் காட்சி அளித்தது.

ஏறத்தாழ 4 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தெய்வீக நிகழ்வானது, அரசாங்கத்தின் மற்றும் பொலிஸாரின் முழு ஒத்துழைப்போடு, சொந்தக் காணியிலிருந்து கோவிலை நோக்கி நூலிலையினால் சக்தி பெறப்பட்டு ஆலயத்தைச் சென்றடைந்தது.

தொடர்ந்து வியாழக்கிழமை (25) அன்று அதிகாலை முதலே கும்பப் பூஜைகள் ஆரம்பமாகி, காலை 11 மணியளவில் மேள தாளங்கள் முழங்க, பக்தர்களின் 'அரோகரா' கோஷங்களுக்கு மத்தியில் கும்பங்கள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டன. அதனைத் தொடர்ந்து, ஆலயத்தின் திருக்கதவு யானையின் மூலம் திறந்து வைக்கப்பட்டது.

அதன்பின், மூலஸ்தான பரிவார மூர்த்திகளுக்கும், மூலஸ்தானத்திற்கும் கும்பங்கள் வரிசையாக எடுத்துச் செல்லப்பட்டன. மேல் மாடியில் உள்ள மூலஸ்தான கோபுரத்திற்கும், அதன் அருகில் உள்ள 33 அடி உயரமான சிலை மற்றும் கொடிஸ்தம்ப கலசத்திற்கும் மிக அற்புதமாகக் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர், ராஜகோபுரத்தில் உள்ள ஐந்து கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நிறைவேறியது.

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தீப பூஜையும், சிவாச்சாரியார்களின் வேத பாராயணமும், ஓதுவார்களின் தேவாரக் கீர்த்தனைகளும் பாடப்பட்டன.

அதன் பின், மூலஸ்தான திருக்கதவு திறப்பதற்கான மங்கள பூஜை ஐஸ்வர்யங்கள் யாவும் வைக்கப்பட்டு, திருகதவு திறப்பதற்காக ஞானசம்பந்த மூர்த்தியினால் பாடப்பட்ட தேவாரக் கீர்த்தனைகளுடன், 'அரோகரா' கோஷத்தின் சிவாச்சாரியார் மூலம்  திருக்கதவு திறக்கப்பட்டது.

இந்தக் குடமுழுக்கு விழாவில் சுமார் 16,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், வருகை தந்த பக்தர்களில் 14,000-க்கும் அதிகமானோருக்குத் தூய முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. அத்துடன் 50,000-க்கும் மேற்பட்ட குடிநீர் பாட்டில்களும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

விழாவின் இறுதி நிகழ்வாக, பூஜைகளைச் சிறப்பாகச் செய்த சிவாச்சாரியார்கள், சிற்ப சாஸ்திரிகள் மற்றும் துணையாட்களுக்கு ஆலய அறங்காவலர் சபையினால் கேடயமும், பரிசுகளும் வழங்கிச் சன்மானம் அளிக்கப்பட்டது.

ஆலயத்தின் இத்தகைய திருப்பணிகளுக்குத் தங்களின் பெரும் பங்களிப்பை வழங்கிய நன்கொடையாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், இளைஞர்கள், மகளிர் மற்றும் உபயதாரர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தினர் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

அத்துடன், செய்தி சேகரிக்க வந்திருந்த ஊடகவியலாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், முகநூல் பக்க ஊடகவியலாளர்கள் மற்றும் நாதஸ்வர வித்துவான்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது.

இன்று முதல் தொடர்ந்து 48 நாட்களுக்குத் தடையின்றி நடைபெறவுள்ள மண்டலாபிஷேக பூஜைகளும் மிகச் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளதால், பக்தர்கள் அனைவரும் காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபெறவிருக்கும் இந்த மண்டலாபிஷேக பூஜைகளிலும் திரளாக வந்திருந்து கலந்துகொண்டு இறைவனது அருளைப் பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.