வல்வெட்டித்துறையில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்
Ad Space
Ad Space
அரச பயங்கரவாதத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞன் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் வல்வெட்டித்துறைப் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் திங்கட்கிழமை (08.06.2026) முற்பகல்-10 மணியளவில் வல்வெட்டித்துறை நகரப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
உரிமைக்காகவும், நீதிக்காகவும் குரல் கொடுக்கும் வல்வை வாழ் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரையும் இந்த நீதிக்கான போராட்டத்தில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
Ad Space
Ad Space