இந்து மதக் குழுவினர் வருகைக்காக பெண் பணியாளர்கள் சிலர், பணியிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதாகக் கூறி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈபிள் கோபுரம்  மூடப்பட்டுள்ளதாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையை தொடர்ந்து தற்போது அதன் செயற்பாடுகள்  வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா  அமைப்புடன் தொடர்புடைய சுமார் 100 பேர் கொண்ட குழு, சனிக்கிழமை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளதை தொடர்ந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமைப்புடன் தொடர்புடைய குழு  நினைவுச்சின்னத்துக்கு வந்தபோது, பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஊழியர் சங்கப் பிரதிநிதி டயான் டவோயின் தெரிவித்துள்ளார்.இந்தக் குழுவினர் வருகையின்போது, ஆண் ஊழியர்களை அந்த இடங்களில் பணியமர்த்துவதற்காக, பெண் ஊழியர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சக ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஈபிள் கோபுரத்தின் செயற்பாடுகள் திங்கட்கிழமை  தற்காலிகமாக நிறுத்தப்பட்டமையை தொடர்ந்து தற்போது அதன் செயற்பாடுகள்  வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇந்தச் சம்பவம் தொடர்பாக நிர்வாகம் பின்னர் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.