புதிய வாகனங்களுக்கான நிலுவையிலுள்ள சுமார் 4 இலட்சம் நிரந்தர இலக்கத் தகடுகளை அச்சிட்டு விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
விலைமனுக்கோரல் பத்திர நடைமுறைகளை முறையாக பின்பற்றி, தனியார் நிறுவனம் ஒன்று இந்த அச்சிடல் பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அச்சிடும் பணிகள் திணைக்களத்தின் வேரஹெரவில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
தற்போது தற்காலிக இலக்கத் தகடுகளுடன் இயங்கி வரும் சுமார் 400,000 வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிரந்தர தகடுகள் வழங்கப்படும்.
அச்சிடல் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டவுடன், நிலுவையிலுள்ள விண்ணப்பங்கள் அனைத்தையும் மிக விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகன இலக்க தகடுகள் அச்சிடும் பணி மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space