சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தின்கீழ், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்துவதற்கான அவகாசம் ஜன.30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதனால், வார விடுமுறை நாட்களாக 24, 25 தேதிகளில் சென்னையில் உள்ள 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், 18 வயது நிரம்பிய தகுதியுடையவர்கள் படிவம்–6ஐ, உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பித்து தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்க கோர படிவம்–7, முகவரி மாற்றுதல், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்ய, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை மாற்றம் செய்ய, மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் என குறிப்பது ஆகியவற்றுக்கு படிவம்–8 மூலம் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space