விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர், மயங்கி விழுந்து உயிரிழப்பு
Ad Space
Ad Space
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர், பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த நபரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைக்காக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்துக்கு அந்த நபர் அழைக்கப்பட்டு, அவர் பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவரை பொலிஸார் உடனடியாக மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Ad Space
Ad Space