பதுளை – கண்டி வீதியில் இன்று திங்கட்கிழமை (30) மதியம் இடம்பெற்ற விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
அலவத்துர, கெட்டியமுல்ல பகுதியைச் சேர்ந்த 33 வயதான அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பதுளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த அரை சொகுசு தனியார் பேருந்து, முன்னால் சென்ற உந்துருளியை முந்திச் செல்ல முயன்றபோது உந்துருளியுடன் பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.