வீட்டுக்கு முன் துணி காயப்போட தடை: பிரெஞ்சு
Ad Space
Ad Space
Ad Space
பிரெஞ்சு நகரம் ஒன்று, அங்கு வாழும் மக்கள் வீட்டுக்கு முன் துணி காயப்போட தடை விதித்துள்ளது.உலக அளவில் எவ்வளவு புகழ்பெற்ற நகரமாக இருந்தாலும் சரி, அங்கு பல வீடுகளில், பால்கனியில் துணி காயப்போடப்பட்டிருப்பதை பல நகரங்களில் இன்று காண்பது சகஜமாகிவிட்டது. இந்நிலையில், தென்மேற்கு பிரான்சிலுள்ள Villeneuve-sur-Lot என்னும் நகரில், வீடுகளின் பால்கனிகளிலும், ஜன்னல்களிலும் துணி காயப் போட தடை விதிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த நகரம், வர்த்தக ரீதியில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்ககூடிய ஒரு நகரம் என்பதால், அங்கு வீடுகள் முன் ஜன்னல்களிலும், பால்கனிகளிலும் துணி காயப்போடுவதால், அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்பதால் இந்த தடை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நகரின் எந்த பகுதியில் துணி காயப்போடக்கூடாது என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்களோ, அந்த பகுதி ஏழைகள் அதிகம் வாழும் பகுதி என்கிறார் எதிர்க்கட்சி கவுன்சிலரான Thomas Bouyssonie என்பவர்.அங்கு துணி காயவைக்கும் இயந்திரங்களோ, துணி காயப்போட தோட்டங்களோ இல்லை என்று கூறும் அவர், இது உரிமை மீறல் என்கிறார்.
Ad Space
Ad Space
Ad Space