வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (9) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முன்னதாக ஜனாதிபதி சட்டத்தரணிகள் முன்னிலையாகி இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாக முடிவுறுத்துவதற்கான நடவடிக்கையினை சுமுகமாக செய்வதாக நீதிமன்றத்துக்கு அளித்திருந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் அதனை சுமுகமாக தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இருந்தபோதிலும் அதன் நடைமுறைகளில் இன்னும் தொங்கு நிலை காணப்படுகின்ற காரணத்தினால் நீதிமன்றமானது எதிர்வரும் பங்குனி மாதம் 6ஆம் திகதிக்கு முன்னதாக நாங்கள் இந்த இரு தரப்பினருடனும் கதைத்து, பிரதேச சபை மற்றும் ஆலய நிர்வாகம் விண்ணப்பதாரர்கள் அனைவரும் கதைத்து பிரச்சினையை சுமுகமாக தீர்க்கவேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் பணிப்புரைக்கு அமைய அதுவரைக் காலமும் இருந்தது இருந்தபடியாகவே இருக்ககவேண்டும் என அனைத்து தரப்பினர்களுக்கும் நிறுவப்பட்டிருக்கிறது.
அதேவேளை இந்த இரு தரப்பினரும் வழக்கினை சுமுகமாக முடிக்கவேண்டும். இது ஒரு பொதுநலன் சார்ந்த விடயமாக இருப்பதனால் நீதிமன்றம் இந்தப் பணிப்புரையை வழங்கியிருக்கிறது. எதிர்வரும் வழக்கு திகதிக்கு முன் இது சம்பந்தமான முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் இது தொடர்பில் பேசி ஒரு நல்ல முடிவினை நீதிமன்றத்துக்கு அறிவிப்பார்கள் என்ற அடிப்படையில் நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது என இவ்வழக்கில் ஆஜராகிய சட்டத்தரணி அ.நிதான்சன் தெரிவித்தார்.
வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space