வெலிக்கடை காவல் துறை நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்!
Ad Space
Ad Space
கொழும்பு - ராஜகிரிய பகுதியில் அண்மையில் கைது செய்யப்பட்ட சீன நாட்டவர்களின் கடவுச்சீட்டுகளை மீண்டும் ஒப்படைப்பதற்காக தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் இலஞ்சம் கோரியதாக சந்தேகத்தின் பேரில் கைதான வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
இருதரப்பு சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Ad Space
Ad Space