முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ இன்று (16) புதன்கிழமை அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளார்.ஒரு உறவினரும்  அவருடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.இவர்கள் இருவரும் இன்றையதினம் அதிகாலை 1:10 மணியளவில் 'சிங்கப்பூர் எயார்லைன்ஸ்' நிறுவனத்திற்குச் சொந்தமான SQ469 ரக விமானத்தில் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (15) செவ்வாய்க்கிழமை தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, மேலதிக சிகிச்சைகளுக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.