ஹொரணை - கொழும்பு ‘120 வழித்தடத்தில்’ இயங்கும் தனியார் பஸ்களின் ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது நாளை எட்டியுள்ளது.
ஹொரணையிலிருந்து கஹத்துடுவை அதிவேக நெடுஞ்சாலை ஊடாக புறக்கோட்டைக்கு இயக்கப்படும் புதிய பஸ் சேவைக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (02) பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக பஸ் சங்கங்களுக்கும், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) மாலை கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இதன்போது, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைத் தலைவர் நிராகரித்த காரணத்தினால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
இதன் காரணமாக, இன்றைய தினமும் குறித்த வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
ஹொரணை - கொழும்பு தனியார் பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space
Ad Space