தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி 234 தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர்​களை தவெக தலை​வர் விஜய் நேற்று அறி​வித்​தார். பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் அவர் போட்​டி​யிடு​கிறார். கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா, ஜேசிடி பிரபாகர், ராஜ்மோகன், சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோபிச்செட்டிப் பாளையத்தில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக ஏப்​.23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதில் திமுக, அதி​முக, தவெக, நாதக என நான்​கு​முனைப் போட்டி நில​வு​கிறது. திமுக,அதி​முக கூட்​டணி கட்​சிகளில் பெரும்​பாலும் வேட்​பாளர்​கள் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டு​விட்​டது. நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஏற்​கெனவே 234 தொகு​தி​களுக்​கும் ஒரே கட்​ட​மாக வேட்​பாளர்​களை அறி​வித்​து​விட்​டார்.

இதற்​கிடையே, சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தனித்​துப் போட்​டி​யிடு​கிறது என்​பதை கட்​சித் தலை​வர் விஜய் சமீபத்​தில் உறு​தி​செய்​தார். இந்​நிலை​யில், சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் நேற்று நடந்த நிகழ்ச்​சி​யில், தமிழகத்​தின் 234 தொகு​தி​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் 28 தொகு​தி​களில் போட்​டி​யிடும் தவெக வேட்​பாளர்​கள் பட்​டியலை ஒரே கட்​ட​மாக விஜய் வெளி​யிட்​டார். அதன்​படி, பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் விஜய் போட்​டி​யிடு​கிறார்.

தியாக​ராய நகர் - புஸ்ஸி ஆனந்த், வில்​லி​வாக்​கம் - ஆதவ் அர்​ஜு​னா, ஆயிரம் விளக்கு - ஜேசிடி. பிர​பாகர், எழும்​பூர் - ராஜ்மோகன், திருப்​பரங்​குன்​றம் - சிடிஆர். நிர்​மல்​கு​மார், கொளத்​தூர் - வி.எஸ்​.​பாபு, சேப்​பாக்​கம் - செல்​வம், விரு​கம்​பாக்​கம் - சபரி​நாதன், வேளச்​சேரி - கிறிஸ்டி பிரித்​தி​வி, ஆர்​.கே.நகர் - மரிய​வில்​சன், துறை​முகம் - சினோரா அசோக், மயி​லாப்​பூர் - வெங்​கட்​ராமன், அண்ணா நகர் - ராம்​கு​மார், சோழிங்​கநல்​லூர் - ஈசிஆர். சரவணன், ராயபுரம் - கோகுல், திரு.​வி.க நகர் - பல்​ல​வி,திருப்​பூர் வடக்கு - சத்​ய​பா​மா, கவுண்​டம்​பாளை​யம் - கனி​மொழி, ஆம்​பூர் - இம்​தி​யாஸ், திருச்​செங்​கோடு - அருண்​ராஜ் போட்​டி​யிடு​கின்​றனர்.

அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள் செங்​கோட்​டையன் கோபிச்​செட்​டிப்​பாளை​யத்​தி​லும், குப.கிருஷ்ணன் லால்​குடி​யிலும் போட்​டி​யிடு​கின்​றனர்.

இதே​போல மாற்​றுக் கட்​சி​யில் இருந்து வந்த பலருக்​கும் வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. மொத்​த​மாக 23 பெண்​கள், 11 முஸ்​லிம்​கள், 11 கிறிஸ்​தவர்​களுக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது.

‘மக்​கள் பணத்தை சுருட்ட மாட்​டேன்’ - விஜய் தலை​மை​யில் அனைத்து வேட்​பாளர்​களும், ‘மக்​கள் பணத்தை சுருட்ட மாட்​டேன். பெண்​கள் பாது​காப்பை உறுதி செய்​வேன். போதை இல்​லாத தமிழகத்தை உரு​வாக்​கு​வேன். ஊழல் கறை படிய​விட மாட்​டேன். இது உறு​தி​மொழி அல்ல, உத்​தர​வாதம்’ என்று உறுதி ஏற்​றனர்.